தொழிலாளர் தின விழிப்புணர்வுச் செய்தி
பள்ளிவாசல்களில் கடமை செய்யும் இமாம்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வோம்.
அவர்கள் தாம் கற்றறிந்த நுபுவ்வத்துடைய இல்மை சமூகத்துக்கு எத்திவைக்கவும் தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவியாகவும் பெறும் தியாகத்துடன் பணியாற்றுகின்றனர்.
அவர்களும் மனிதர்களே, அவர்களுடன் கண்ணியமாக, கௌரவமாக நடந்து கொள்வது அவர்கள் சார்ந்த பள்ளிவாசல் நிருவாகங்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினரின் கடமையாகும்.
அவர்களது வாழ்வாதாரத்துக்கு போதுமான ஊதியங்களையும் சலுகைகளையும் வழங்கி, அவர்கள் தன்னிறைவோடு பணியாற்ற உதவுவது காலத்தின் தேவையாகும்.
எனவே இவர்களது விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களமும் வக்பு சபையும் அகில இலங்கை ஜம்இய்த்துல் உலமாவும் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து அவர்களது உரிமையை பாதுகாக்க வேண்டுமென இலங்கை இமாம்கள் மன்றம் எதிர்பார்க்கின்றது.
இலங்கை இமாம்கள் மன்றம்